தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தனது 48வது படத்தில் சிலம்பரசன் நடித்து வருகிறார். இது தேசிங்கு பெரியசாமி ரஜினிகாந்துக்கு சொன்ன கதை. அதில்தான் சிம்பு நடிக்கிறார் எனத் தகவல் பரவி வரும் நிலையில் அதுகுறித்து அவர் பேசியுள்ளார்.
'மாநாடு', 'வெந்து தணிந்தது காடு', 'பத்து தல' ஆகிய படங்களின் வெற்றிக்கு பிறகு நடிகர் சிம்பு தன்னுடைய 48வது படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார். இந்தப் படத்திற்காக தோள்பட்டை வரை முடி வளர்ப்பது, உடல் எடையை குறைப்பது, கடுமையான வாள் பயிற்சி என இந்தப் படத்திற்காக மாறி இருக்கிறார் சிம்பு. இந்த நிலையில், சிம்பு படத்திற்கு முன்பு தேசிங்கு பெரியசாமி ரஜினிகாந்துக்கு கதை சொன்னார். ஆனால், அந்த கதையில் ரஜினிகாந்த் நடிக்காத நிலையில், அதில்தான் இப்போது சிம்பு நடிக்கிறார் என இணையத்தில் ஒரு தகவல் பரவி வந்தது. இது குறித்து தேசிங்கு பெரியசாமி தற்போது உடைத்து பேசியுள்ளார்.
இதுகுறித்து அவர் பேசியிருப்பதாவது, "இந்தக் கதை ஏற்கெனவே ரஜினி சாருக்கு சொன்னது தான். அதுதான் இப்போது 'எஸ்.டி.ஆர். 48'வது படமாக உருவாகியுள்ளது. அதேபோல், ரஜினிக்குப் பதிலாக சிம்பு நடித்தாலும், கதையில் பெரிதாக எந்த மாற்றங்களும் செய்யவில்லை. ஏனெனில், ரஜினியும் சிம்புவும் ஒரே மாதிரியான மாஸ் கொண்டவர்கள் தான். அதனால், சிம்புவுக்காக எந்த மாற்றமும் இல்லாமல் 'எஸ்.டி.ஆர்.48' அப்படியே உருவாகிறது" என மனம் திறந்துள்ளார்.