வேறு மருத்துவமனைக்கு திடீர் மாற்றம்: இயக்குநர் பாரதிராஜாவுக்கு மேல் சிகிச்சை

வேறு மருத்துவமனைக்கு திடீர் மாற்றம்: இயக்குநர் பாரதிராஜாவுக்கு மேல் சிகிச்சை

இயக்குநர் பாரதிராஜா சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மேல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இயக்குநர் பாரதிராஜாவுக்கு (வயது 80) கடந்த 23-ம் தேதி திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து சென்னை தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், "தனது தந்தைக்கு வழக்கமான சர்க்கரை நோய் பரிசோதனை செய்யவே மருத்துவமனைக்குச் சென்றார். சோதனையில் உப்பின் அளவு குறைந்ததால் நீர்ச்சத்து குறைபாடு இருப்பது தெரியவந்ததையடுத்து, மருத்துவர்கள் சில நாட்கள் அவருக்கு ஓய்வு தேவை என்பதை அறிவுறுத்தினர். அதன்படி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அப்பாவின் உடல்நிலை இப்போது நன்றாக உள்ளது. இன்னும் 2 அல்லது 3 நாட்கள் ஓய்வுக்குப் பின் வீடு திரும்புவார்" என்று அவரது மகனும் நடிகருமான மனோஜ் கூறியிருந்தார்.

இந்நிலையில், சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு இயக்குநர் பாரதிராஜா மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் மேல் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in