'வாய்ப்புத் தருவதாகக் கூறி பாலியல் வன்கொடுமை'

இயக்குநர் மீது பெண் புகார்
பாலச்சந்திர குமார்
பாலச்சந்திர குமார்

தன்னை பாலியல் வன்கொடுமை செய்து, தொடர்ந்து மிரட்டியதாக பிரபல இயக்குநர் மீது பெண் ஒருவர் கொடுத்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பிரபல நடிகை கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில் அவருடைய நண்பராக இருந்த இயக்குநர் பாலச்சந்திர குமார், திலீப்புக்கு எதிராக பரபரப்பு புகாரை கூறினார்.

நடிகர் திலீப்
நடிகர் திலீப்

நடிகை பாலியல் ரீதியாக தாக்கப்பட்ட வீடியோவை திலீப் பார்த்தார் என்றும் விசாரணை அதிகாரியை கொல்ல அவர் சதி செய்தார் என்றும் பரபரப்பு குற்றச்சாட்டைக் கூறினார். இதனால், நடிகை கடத்தல் வழக்கு மீண்டும் சூடு பிடித்தது. இந்தச் சதி வழக்கில் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில், நடிகர் திலீப், அவர் சகோதரர் அனூப் உட்பட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. நடிகர் திலீப் நடிக்கும் படத்தை பாலசந்திரகுமார் இயக்க இருந்ததாகவும் அது தடைபட்டதால், திலீப்பை பழிவாங்க அவர் இவ்வாறு புகார் கூறியதாகவும் செய்திகள் வெளியாயின.

பாலச்சந்திர குமார்
பாலச்சந்திர குமார்

இந்த வழக்கில் திலீப் உள்ளிட்டோர் முன்ஜாமீன் கோரியுள்ளனர். இந்த மனு மீதான தீர்ப்பு திங்கட்கிழமை வருகிறது.

இதற்கிடையே, இயக்குநர் பாலச்சந்திரகுமார் மீது கண்ணூரைச் சேர்ந்த பெண் ஒருவர், பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளார். கொச்சி நகர காவல் துறை ஆணையரிடம் அவர் அளித்துள்ள புகாரில், தனக்கு நடிக்க வாய்ப்புத் தருவதாகக் கூறி எர்ணாகுளத்தில் உள்ள ஓட்டல் ஒன்றுக்கு அழைத்ததாகவும் அங்கு தன்னை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்ததாகவும் கடந்த 10 வருடத்துக்கு முன் இந்தச் சம்பவம் நடந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

அந்தப் பெண்ணின் புகாரைப் பெற்றுக்கொண்ட போலீஸார், விசாரித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in