விஜய், ஷாருக்கான் இணையும் படத்திற்கு ரூ.3000 கோடி வசூல்: அட்லியின் மாஸ்டர் பிளான்!

நடிகர்கள் விஜய் மற்றும் ஷாருக்கானுடன் அட்லி
நடிகர்கள் விஜய் மற்றும் ஷாருக்கானுடன் அட்லி

நடிகர்கள் விஜய், ஷாருக்கான் இணையும் படத்திற்கு 3000 கோடி வசூல் பெறுவேன் என அட்லி நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

நடிகர்கள் ஷாருக்கான், நயன்தாரா, தீபிகா படுகோனே உள்ளிட்டப் பலர் நடித்திருந்த படம் ‘ஜவான்’. இதனை அட்லி இயக்கி இருந்தார். இந்தப் படத்தின் வசூல் கிட்டத்த ஆயிரம் கோடியை கடந்துள்ளது. ஏற்கெனவே, ‘ஜவான்’ படத்தில் நடிகர் ஷாருக்கானுடன் விஜய் நடிப்பதாக இருந்து அது மிஸ் ஆனது. 4500 திரையரங்குகளில் வெளியான இந்தத் திரைப்படம், வெளியான 32 நாட்களிலேயே ரூ.1117.39 கோடி ரூபாய் வசூலித்த முதல் இந்தி திரைப்படம் என்ற பெருமையையும் இது பெற்றுள்ளது.

ஷாருக்கானுடன் அட்லி இணைய காரணமானது நடிகர் விஜய்தான். இந்த நிலையில், சமீபத்திய பேட்டியில் விஜய், ஷாருக்கான் இணையும் படத்தில் 3000 கோடி ரூபாய் வசூல் செய்ய விரும்புவதாக இயக்குநர் அட்லி தெரிவித்துள்ளார்.

'ஜவான்’
'ஜவான்’

இது குறித்து சமீபத்திய பேட்டியில் அவர் தெரிவித்திருப்பதாவது, “ரூ.3000 கோடி வசூல் செய்யக்கூடிய படத்தை இயக்க விரும்புகிறேன். நடிகர்கள் விஜய் சாரும், ஷாருக்கான் சாரும் இணைந்து நடித்தால் அந்தப் படம் நிச்சயம் 3000 கோடி ரூபாயை வசூலிக்கும். கூடிய விரைவில் அது நடக்கும் என நம்புகிறேன். என் மீது நம்பிக்கை வைத்திருக்கும் இருவருக்கும் நன்றி” எனக் கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in