’ஜவான்’ ஷாருக்கான் & அட்லி...
’ஜவான்’ ஷாருக்கான் & அட்லி...

ஆஸ்கருக்கு செல்கிறது ‘ஜவான்’; அட்லி சொன்ன அதிர்ச்சி தகவல்!

’ஜவான்’ படத்தை ஆஸ்கருக்கு அனுப்பலாம் என இயக்குநர் அட்லி தெரிவித்துள்ளார்.

அட்லி இயக்கத்தில் நடிகர்கள் ஷாருக்கான், நயன்தாரா உள்ளிட்டப் பலர் நடித்திருந்த ‘ஜவான்’ திரைப்படம் உலகம் முழுவதும் 600 கோடிக்கும் அதிக வசூலைப் பெற்றிருப்பதாகப் படக்குழு தெரிவித்துள்ளது. இதன் வெற்றி விழாவும் சமீபத்தில் மும்பையில் நடைபெற்றது. இதனை அடுத்து நேர்காணல் ஒன்றில் இயக்குநர் அட்லி ‘ஜவான்’ படத்தை ஆஸ்கருக்கு அனுப்புவது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ளது நிஜமாகவே ரசிகர்களையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

அந்த நேர்காணலில் அட்லி, “எல்லா விஷயங்களும் சரியாக அமைந்தால் ‘ஜவான்’ நிச்சயம் ஆஸ்கருக்கு செல்லும். சினிமாவில் வேலைப் பார்க்கும் அனைவருக்கும் கோல்டன் குளோப்ஸ், ஆஸ்கர், தேசிய விருதுகள் வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதுபோல தான் எனக்கும்! ’ஜவான்’ படம் ஆஸ்கர் விருது வாங்க வேண்டுமென்ற ஆசை இருக்கிறது. இதுகுறித்து ஷாருக்கான் சாருடன் பேச போகிறேன்” என அந்தப் பேட்டியில் கூறியுள்ளார்.

அட்லியின் இந்த பேச்சுக்கு ரசிகர்கள் பலரும், ‘ஆஸ்கர் அந்த அளவுக்கு தரம் குறையவில்லை’ என்றும், ‘இந்த காப்பி பேஸ்ட்டுக்கு ஆஸ்கர் கேக்குதா, மனசாட்சியே இல்லையா அட்லி’ எனவும் கூறி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in