‘வாழ்த்துகள் பாப்பா...’ அட்லி பிறந்தநாளுக்கு விசேஷ வாழ்த்து!

குடும்பத்துடன் இயக்குநர் அட்லி...
குடும்பத்துடன் இயக்குநர் அட்லி...

இயக்குநர் அட்லி இன்று தனது 37வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நாளில் அவரது மனைவி பிரியா அவருக்கு வாழ்த்து சொல்லி மகனுடன் இருக்கும் புதிய புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

இயக்குநர் அட்லி தனது மனைவி பிரியாவுடனும் மகன் அட்லியுடனும் இருக்கும் புதிய புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். பாலிவுட்டில் ‘ஜவான்’ படம் மூலம் எண்ட்ரி கொடுத்துள்ள அட்லி முதல் படத்திலேயே ரூ.600 கோடி என்கிற வசூல் சாதனையை செய்துள்ளார். அடுத்தடுத்தும் பாலிவுட் படம்தான் என்று ஒரு சாரரும், இல்லை அவர் விஜயுடன் அடுத்து இணைகிறார் என்றும் பேச்சுகள் வரத் தொடங்கியுள்ளது. சமீபத்தில் தன் மனைவி பிரியாவுடன் அம்பானி வீட்டு விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்து கொண்ட அட்லி தனது மகன் மீர் மற்றும் பிரியாவுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

அட்லிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் சொல்லி பிரியா, ‘நீங்கள் என் மேல் காட்டும் அன்புக்கும் கொடுத்து வரும் மகிழ்ச்சிக்கும் எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது. என்னால் முடிந்த அளவு அந்த அன்பையும் மகிழ்ச்சியையும் திரும்ப கொடுக்க முயன்று கொண்டிருக்கிறேன். உங்களுக்கும் நமது மீருக்கும் என்னுடைய அன்பு. பிறந்தநாள் வாழ்த்துகள் பாப்பா’ எனக் கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in