இயக்குநர் அருண்ராஜா காமராஜுக்கு இரண்டாவது திருமணம்?

இயக்குநர் அருண்ராஜா காமராஜுக்கு இரண்டாவது திருமணம்?

இயக்குநர் அருண்ராஜா காமராஜுக்கு இரண்டாவது திருமணம் நடைபெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

‘கனா’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் அருண்ராஜா கமாராஜ். இயக்குநராக மட்டுமல்லாது இவர் நடிகர், பாடலாசிரியர் என பன்முகத் திறமை கொண்டவர். இவருடைய காதல் மனைவி சிந்துஜா கடந்த ஆண்டு மே மாதத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தார். தன் மனைவி சிந்துஜா மறைவு குறித்து அருண்ராஜா காமராஜ் பல உருக்கமான நினைவுகளைப் பகிர்ந்து வந்தார்.

இதுமட்டுமல்லாது, இந்த வருடம் இயக்குநராக இவரது இரண்டாவது படம் ‘நெஞ்சுக்கு நீதி’ உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் ரீமேக்கிற்காக தன்னிடம் வந்தபோது தான் கண்டிப்பாக இயக்க வேண்டும் என்பதையும் படத்தில் கிட்டத்தட்ட உதவி இயக்குநர் போலவும் தன் மனைவி சிந்து செயல்பட்டதையும் அருண்ராஜா பல பேட்டிகளில் தெரிவித்து இருந்தார்.

தற்போது அருண்ராஜா காமராஜ்ஜிற்கு இரண்டாவது திருமணம் நடைபெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 28ம் தேதியே இவருக்குத் திருமணம் முடிந்து விட்டதாகவும் இன்னும் சில நாட்களில் தன்னுடையத் திருமணம் பற்றி இயக்குநர் அருண்ராஜா காமராஜ் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் எனவும் சொல்லப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in