மனைவியுடன் புது வீட்டில் குடிபுகுந்த விஜய் பட இயக்குநர்... ரசிகர்கள் வாழ்த்து!

இயக்குநர் விஜய் வீட்டு விழா
இயக்குநர் விஜய் வீட்டு விழா

இயக்குநர் ஏ.எல். விஜய் தன் மனைவியுடன் பல கோடி ரூபாய் மதிப்புள்ள புதிய வீட்டில் குடிபுகுந்துள்ளார். இந்தப் புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழில் ‘கிரீடம்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஏ.எல்.விஜய். இவர், ‘மதராசப்பட்டினம்’, ‘தலைவா’ போன்ற பல ஹிட் படங்களைக் கொடுத்தார். இவருக்கும் நடிகை அமலாபாலுக்கும் முன்பு திருமணம் நடந்து விவாகரத்தானது. அதன்பிறகு இவர் 2019ல் ஐஸ்வர்யா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இப்போது இந்த தம்பதிக்கு ஒரு குழந்தையும் உள்ளது.

இந்த நிலையில், ஏ.எல். விஜய் புது வீடு ஒன்றை வாங்கியுள்ளார். இந்த வீட்டிற்கு பூஜை சமீபத்தில் போடப்பட்டது. அந்தப் பூஜையில் நடிகர் ஆர்யா, தனது மனைவி, மகளோடு கலந்து கொண்டார். இந்தப் புகைப்படங்களை ஆயிஷா தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்து, ‘விஜய் அண்ணா மற்றும் ஐஸ்வர்யா இருவரின் புது வீட்டிற்கு வாழ்த்துகள்’ எனக் கூறியுள்ளார். கோடிக்கணக்கில் பணம் போட்டு வாங்கி இருக்கும் விஜயின் புது வீட்டிற்கு ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

தேஜஸ் போர் விமானத்தில் பறந்த பிரதமர் மோடி!

எப்போதும் மன்னிப்பு கேட்க மாட்டேன்... குஷ்பு பேட்டி!

நடுரோட்டில் சப்-இன்ஸ்பெக்டர்கள் கட்டிப் புரண்டு சண்டை!

திருமணத்துக்கு சென்ற தம்பதியர்... லாரி மோதி பலியான சோகம்!

16,484 சதுர அடி.. அன்பு மகளுக்கு ரூ.50 கோடியில் அமிதாப் தந்த கிஃப்ட்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in