குற்றப்பிரிவு விசாரணையில் நம்பிக்கை இல்லை: நடிகர் திலீப்

குற்றப்பிரிவு விசாரணையில் நம்பிக்கை இல்லை: நடிகர் திலீப்

நடிகை கடத்தல் வழக்கில், குற்றப்பிரிவு போலீஸார் விசாரணையில் நம்பிக்கை இல்லை என்று நடிகர் திலீப் தரப்பில் வாதிடப்பட்டது.

நடிகை கடத்தல் விவகாரத்தில், விசாரணை அதிகாரியை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாகத் தொடரப்பட்ட வழக்கில், நடிகர் திலீப் மற்றும் அவர் உறவினர்கள் உட்பட 6 பேரிடம் குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர். பின்னர், விசாரணைக்கு நடிகர் திலீப் ஒத்துழைக்கவில்லை என்றும் செல்போன்களை தர அவர் மறுத்துவிட்டதாகவும் நீதிமன்றத்தில் போலீஸார் தெரிவித்தனர்.

இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிமன்றம், திங்கட்கிழமை காலை 10 மணிக்குள் உயர் நீதிமன்ற பதிவாளரிடம் நடிகர் திலீப்பின் செல்போன்கள் உட்பட 6 செல்போன்களையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

திலீப்
திலீப்

இதையடுத்து கேரள உயர் நீதிமன்ற பதிவாளரிடம், நடிகர் திலீப்பின் 3 செல்போன்கள், அவர் சகோதரர் அனூப்பின் 2 செல்போன்கள், சகோதரி கணவர் சுராஜின் ஒரு போன் ஆகிய 6 செல்போன்கள் சீலிடப்பட்ட உறையில் வைத்து நேற்று சமர்ப்பிக்கப்பட்டது.

பின்னர், நேற்று பிற்பகல் விசாரணை தொடங்கியது. போலீஸ் தரப்பு வழக்கறிஞர், “சமர்ப்பிக்கப்பட்ட திலீப்பின் போன்களை, போலீஸாரிடம் ஒப்படைக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். திலீப் தரப்பு வழக்கறிஞர் வாதிடும்போது, “திலீப்புடன் தொடர்புடைய அனைவரையும் குற்றவாளியாக்க முயற்சிக்கிறார்கள். குற்றப்பிரிவு போலீஸார் விசாரணையில் நம்பிக்கை இல்லை. வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும். அதுவரை போலீஸாரிடம் போன்களை ஒப்படைக்கக் கூடாது” என்றார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கோபிநாத், முன்ஜாமீன் மனு விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்தார். இதையடுத்து இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற இருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in