சபரிமலையில் திலீப்; நடிகை கடத்தல் வழக்கில் அவகாசம் கேட்கும் போலீஸ்

சபரிமலையில் திலீப்; நடிகை கடத்தல் வழக்கில் அவகாசம் கேட்கும் போலீஸ்
சபரிமலையில் நடிகர் திலீப்

நடிகை கடத்தல் வழக்கு விசாரணையை முடிக்க, மேலும் 3 மாதம் அவகாசம் வேண்டும் என்று குற்றப்பிரிவு போலீஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2017-ம் ஆண்டு, தமிழ், மலையாளம், கன்னடப் படங்களில் நடித்து வந்த பிரபல நடிகை, காரில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானார். இந்த வழக்கில் 10 பேர் குற்றம் சாட்டப்பட்ட நிலையில், 7 பேரை போலீஸார் கைது செய்தனர். நடிகர் திலீப்பும் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்த வழக்கில் சமீபத்தில் கிடைத்த ஆதாரத்தின் படி அவர் மனைவி காவ்யா மாதவனும் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்து வந்த குற்றப்பிரிவு போலீஸார், வழக்கு விவரங்களின் முன்னேற்ற அறிக்கையை, விசாரணை நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்தனர். அதில், விசாரணையை முடிக்க இன்னும் 3 மாதம் அவகாசம் வேண்டும் என்று கேட்டுள்ளனர்.

இதற்கிடையே, நடிகர் திலீப், இன்று காலை சபரிமலைக்கு சென்றார். அங்கு சன்னிதானத்தில் சிறிது நேரம் இருந்த திலீப், சாமி தரிசனம் செய்தார். சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டன. அவர் நண்பர்கள் சரத், மானேஜர் வெங்கி ஆகியோரும் அவருடன் சென்றனர்.

Related Stories

No stories found.