`ஆதாரம் இருக்கு, ஜாமீனை ரத்து செய்யவும்'- நடிகர் திலீப்புக்கு எதிராக போலீஸ் மனு

`ஆதாரம் இருக்கு, ஜாமீனை ரத்து செய்யவும்'- நடிகர் திலீப்புக்கு எதிராக போலீஸ் மனு

நடிகர் திலீப்புக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி போலீஸார் மனு தாக்கல் செய்துள்ளனர்.

கேரளத்தில் கடந்த 2017-ம் ஆண்டு பிரபல நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த வழக்கில் நடிகர் திலீப் உட்பட சிலர் கைது செய்யப்பட்டனர். பின்னர் நடிகர் திலீப் ஜாமீன் பெற்றார். சாட்சிகளை கலைக்கக் கூடாது, வழக்கில் செல்வாக்கு செலுத்தக் கூடாது என்ற நிபந்தனையுடன் அவருக்கு கேரள உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

இந்த வழக்கு இப்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் உயர்நீதிமன்ற நிபந்தனைகளை நடிகர் திலீப் மீறிவிட்டதாகவும் சாட்சிகளிடம் அவர் செல்வாக்கு செலுத்தியதற்கான ஆதாரம் கிடைத்துள்ளதாகவும் கூறி ஜாமீனை ரத்து செய்யுமாறு விசாரணை நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வழக்குக்கு தொடர்புடைய நீதிமன்ற நடவடிக்கைகளின் சில ஆவணங்கள் ஊடகங்களுக்கு கசிந்தது தொடர்பான வழக்கில் விசாரணை அதிகாரி டி.எஸ்.பி பைஜு பவுலோஸ் கொச்சி நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார். அவர் அளித்த விளக்கம் திருப்திகரமாக இல்லை என்பதால் குற்றப்பிரிவு ஏடிஜிபியிடம் நீதிமன்றம் அறிக்கை கோரியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in