சூடுபிடிக்கிறது ‘சூர்யா42’ வியாபாரம்: டிஜிட்டல் உரிமை விற்பனையின் அசத்தல் அப்டேட்!

சூடுபிடிக்கிறது ‘சூர்யா42’ வியாபாரம்: டிஜிட்டல் உரிமை விற்பனையின் அசத்தல் அப்டேட்!

நடிகர் சூர்யா தற்போது இயக்குநர் சிவா இயக்கத்தில் ‘சூர்யா42’ படத்தில் நடித்துவருகிறார். இரண்டு பாகங்களாக வெளியாகவிருக்கும் இப்படத்தின் வியாபாரம் இப்போதே சூடுபிடித்திருக்கிறது.

யுவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டுடியோ க்ரீன் இணைந்து தயாரிக்கும் ‘சூர்யா42’ படத்தில் ஐந்து வேடங்களில் சூர்யா நடிப்பதாகக் கூறப்படுகிறது. பாலிவுட் நடிகை திஷா பாட்டனி அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். இப்படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். ஏற்கெனவே இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் இப்படத்தின் டிஜிட்டல் உரிமைக்கான வியாபாரம் மட்டும் சுமார் 100 கோடி ரூபாயை நெருங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் படப்பிடிப்பு நிறைவடையாத நிலையில் இப்படத்தின் வியாபாரம் சூடுபிடித்திருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in