
'தலைநகரம்', 'மருதமலை' உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கிய சுராஜின் உதவியாளர் எம்.ஆர்.மாதவன் இயக்கியுள்ள திரைப்படம் 'டைனோசர்ஸ்'.
கேங்ஸ்டர், ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள இதில் உதய் கார்த்தி, ரிஷி ரித்விக், சாய் பிரியா, யாமினி சந்தர் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜூலை 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தை கேலக்ஸி பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.
'குளிர் 100 டிகிரி', 'கடவுள் இருக்கான் குமாரு' உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த போபோ சசி இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்ற நிலையில், ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் 'டைனோசர்ஸ்' படத்தின் கதாபாத்திரங்களை படக்குழு போஸ்டர்கள் மூலம் அறிமுகம் செய்து வருகிறது. இப்படத்தில் தனா என்ற கதாபாத்திரத்தில் நடிகர் ரிஷியும், ஆறுமுகமாக ரமணாவும், பாபு கிளியப்பனாகவும் நடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டர்கள் தற்போது இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.