தொலைக்காட்சியில் படத்தை ஒளிபரப்பாமல் இருக்க ரூ.8 கோடி கொடுத்தாரா தயாரிப்பாளர்?

பாலிவுட் திரையுலகில் பரபரப்பு
தொலைக்காட்சியில் படத்தை ஒளிபரப்பாமல் இருக்க ரூ.8 கோடி கொடுத்தாரா தயாரிப்பாளர்?

தொலைக்காட்சியில் படத்தை ஒளிபரப்பாமல் இருப்பதற்காக, தயாரிப்பாளர் 8 கோடி ரூபாய் கொடுத்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அல்லு அர்ஜுன், பூஜா ஹெக்டே நடித்து தெலுங்கில் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான படம், ’அலா வைகுந்தபுரம்லோ’. த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கிய இந்தப் படத்தில், தபு, ஜெயராம், நிவேதா பெத்துராஜ், சமுத்திரக்கனி, நிஷாந்த், முரளி சர்மா உட்பட பலர் நடித்திருந்தனர். ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தில் இடம்பெற்ற ’புட்ட பொம்மா’ பாடல் சிறப்பான வரவேற்பைப் பெற்றது. யூடியூபிலும் இந்தப் பாடல் சாதனை படைத்தது.

இந்தப் படத்தின் இந்தி டப்பிங் உரிமை, கோல்ட்மைன்ஸ் டெலிபிலிம்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த மனீஷ் ஷா என்பவருக்கு 4 கோடி ரூபாய்க்குக் கொடுக்கப்பட்டது.

கார்த்திக் ஆர்யன், கிர்த்தி சனான்
அல்லு அர்ஜுன், பூஜா ஹெக்டே
கார்த்திக் ஆர்யன், கிர்த்தி சனான் அல்லு அர்ஜுன், பூஜா ஹெக்டே

இந்நிலையில், ’அலா வைகுந்தபுரம்லோ’ படம் ’ஷே்ஸதா’ (Shehzada) என்ற பெயரில் இந்தியில் ரீமேக் ஆகிறது. ரோகித் தவான் இயக்கும் இந்தப் படத்தில் கார்த்திக் ஆர்யன், கிர்த்தி சனான் நடிக்கின்றனர். பூஷன் குமாரின் டி-சீரிஸ் நிறுவனம் அல்லு அரவிந்தின் கீதா ஆர்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்தியில் தயாரிக்கிறது.

இதற்கிடையே, ’அலா வைகுந்தபுரம்லோ’ படம் டப் செய்யப்பட்டு, டிவி-யிலோ, ஓடிடி தளங்களிலோ வெளியானால், ’ஷேஸதா’ படத்தின் வசூல் பாதிக்கும் என்பதால், இதன் தயாரிப்பாளர் ஒரு முடிவு செய்தார். அதன்படி, டப்பிங் படத்தை டிவி மற்றும் ஓடிடிதளங்களில் வெளியிடாமல் இருக்க, மணிஷ் ஷாவுக்கு 8 கோடி ரூபாயை அவர் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது இந்தித் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in