'ப்ரின்ஸ்’ படத்தோல்வி: 5 கோடி சம்பளத்தைக் குறைத்தாரா நடிகர் சிவகார்த்திகேயன்?

நடிகர் சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன் 'ப்ரின்ஸ்’ படத்தோல்வி: 5 கோடி சம்பளத்தைக் குறைத்தாரா நடிகர் சிவகார்த்திகேயன்?

‘ப்ரின்ஸ்’ படத்தோல்வியால் தனது அடுத்தப் படத்திற்கு நடிகர் சிவகார்த்திகேயன் 5 கோடி சம்பளத்தைக் குறைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மடோனா அஸ்வின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ‘மாவீரன்’ படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இதில் சிவகார்த்திகேயன் ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்து வருகிறார். இந்தப் படத்தை அடுத்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல் தயாரிப்பில் நடிக்கிறார். இதில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சாய்பல்லவி நடிக்கிறார். இதுமட்டுமல்லாது, ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்து இயக்கும் புதிய படத்திலும் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்க உள்ளார். இந்தப் படத்தில்தான் நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கான சம்பளத்தைக் குறைத்துள்ளார்.

தெலுங்கு நடிகர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘ப்ரின்ஸ்’ திரைப்படம் கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில் வெளியானது. இந்தப் படம் மோசமான தோல்வியைத் தழுவி தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியது. இதனால், சிவகார்த்திகேயன் புதிதாக ஒப்பந்தமாகி இருக்கும் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் தனது வழக்கமான சம்பளத்தை விட ஐந்து கோடியைக் குறைத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in