அட்லீ இயக்கும் படம்: சமந்தா வாய்ப்பு நயன்தாராவுக்கு சென்றதா?

அட்லீ இயக்கும் படம்: சமந்தா வாய்ப்பு நயன்தாராவுக்கு சென்றதா?

அட்லீ இயக்கும் படத்தில் சமந்தா நடிக்க மறுத்ததால், அந்த வாய்ப்பு நயன்தாராவுக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இயக்குநர் அட்லீ, ஷாருக்கான் நடிக்கும் படத்தை இப்போது இயக்கி வருகிறார். இதில் நயன்தாரா நாயகியாக நடிக்கிறார். மற்றும் சான்யா மல்கோத்ரா, சுனில் குரோவர் உட்பட பலர் நடிக்கின்றனர். இதில் ஷாருக்கான் அப்பா, மகன் என 2 வேடங்களில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. நயன்தாரா விசாரணை அதிகாரியாக நடிக்கிறார். இதன் ஷூட்டிங் கடந்த சில மாதங்களுக்கு முன் புணேவில் தொடங்கியது. அதில் நயன்தாராவும் கலந்துகொண்டார்.

சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில், ஷாருக்கான் மகன் ஆர்யன் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டதால், ஷூட்டிங் தடைப்பட்டது. பின்னர் ஷாருக், ’பதான்’ என்ற இந்திப் படத்தின் ஷூட்டிங்கிற்காக சென்றார். அது முடிந்த பின் மும்பையில் ஷூட்டிங் மீண்டும் தொடங்கியது.

இந்தப் படத்துக்கு ’ஜவான்’ என தலைப்பு வைத்துள்ளனர். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. கூடவே மிரட்டலான டீசரும் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஜூன் 2-ம் தேதி ரிலீஸ் ஆகும் இந்தப் படம், பான் இந்தியா முறையில், தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது.

இதற்கிடையே இந்தப் படத்தில் நடிக்க, சமந்தாவிடம்தான் முதலில் பேசியதாகவும் அவர் மறுத்ததால் அந்த வாய்ப்பு நயன்தாராவுக்கு சென்றதாகவும் கூறப்படுகிறது. இந்தப் படத்தின் பேச்சுவார்த்தை 2019-ம் தொடங்கியது. அப்போது இயக்குநர் அட்லீ, சமந்தாவிடம் நடிக்க கேட்டுள்ளார். நாக சைதன்யாவுடன் குடும்ப வாழ்க்கையை தொடங்க முடிவு செய்திருப்பதாகவும் அதனால் இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பில்லை என்று சமந்தா மறுத்துள்ளார். பிறகுதான் நயன்தாராவை படக்குழு ஒப்பந்தம் செய்ததாகக் கூறப்படுகிறது.

பிறகு சமந்தாவும் நாக சைதன்யாவும் விவகாரத்து பெற்றனர். சமந்தா தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in