ஆஸ்கர் விருது வெல்ல கோடிக்கணக்கில் செலவு செய்தாரா ராஜமெளலி?

ராஜமெளலி
ராஜமெளலிஆஸ்கர் விருது வெல்ல கோடிக்கணக்கில் செலவு செய்தாரா ராஜமெளலி?
Updated on
1 min read

இயக்குநர் ராஜமெளலி ’ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படம் ஆஸ்கர் விருது பெற கோடிக்கணக்கில் செலவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். உள்ளிட்டப் பலர் நடிப்பில் 'ஆர்.ஆர்.ஆர்.' திரைப்படம் கடந்த வருடம் மார்ச் மாதத்தில் வெளியானது. பான் இந்தியா படமாக வெளியான இந்தப் படம் உலகம் முழுவதும் ஆயிரம் கோடி ரூபாய் வசூல் கடந்து சாதனை படைத்தது. இந்த நிலையில் 'ஆர்.ஆர்.ஆர்.' திரைப்படத்தை ராஜமௌலி அயல்நாட்டு மொழி சார்ந்த படங்கள் பிரிவில் ஆஸ்கருக்கு அனுப்பினார். கோல்டன் குளோப் விருது உள்ளிட்ட பல விருதுகளை இந்தப் படம் பெற்றது. மேலும், சிறந்த பாடலுக்காக 'நாட்டு நாட்டு' பாடல் மற்றும் அதனை இசையமைப்பாளர் கீரவாணி ஆகியோருக்கு விருது கிடைத்தது. ஹாலிவுட் கிரிட்டிக்ஸ் அசோசியேசன் விருது விழாவிலும் ஐந்து விருதுகளை இந்த படம் வென்றது. ஆஸ்கர் விருதுகளை பெற்று விட வேண்டும் என்ற முனைப்பில் கடந்த சில மாதங்களாக இயக்குநர் ராஜமௌலி ஹாலிவுட் வட்டாரத்தில் பயணித்து வருகிறார்.

அங்குள்ள முக்கிய திரையரங்குகளில் திரைப்படத்தை திரையிட்டு காட்டுவது, விருந்தினர்களை அழைப்பது என இதற்காக கிட்டத்தட்ட 83 கோடி ரூபாய்க்கும் மேல் செலவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வளவு செலவு செய்வது விருதுக்காக அல்ல தன்னுடைய படத்தை சர்வதேச அளவில் கொண்டு போய் சேர்ப்பதற்காக மட்டுமே என்கின்றனர். இதனால், உலக அளவில் தன்னுடைய மார்க்கெட்டும் இந்தியப் படங்களுக்கான மார்க்கெட்டும் உயரும் என ராஜமெளலி திட்டம் வகுத்துள்ளதாகவும் சொல்கிறார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in