‘குக் வித் கோமாளி’ சிவாங்கியால்தான் வெளியேறினேனா? -கிஷோர் விளக்கம்!

‘குக் வித் கோமாளி’
‘குக் வித் கோமாளி’ கிஷோர்

’சிவாங்கியால் ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினேனா’ என்ற சர்ச்சைக்கு அதன் போட்டியாளரும் இயக்குநருமான கிஷோர் விளக்கம் கொடுத்துள்ளார்.

’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் நான்காவது சீசன் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த சீசன் ஆரம்பித்து சில வாரங்கள் கடந்திருக்கும் நிலையில், முதல் எலிமினேஷன் சுற்று நடந்தது. அதில் காளை, ஷெரின், கிஷோர் ஆகியோர் எலிமினேஷன் பட்டியலில் இருந்தனர்.

இதில், காளையன், ஷெரின் ஆகியோர் காப்பாற்றப்பட்ட நிலையில், இந்த சீசனின் முதல் நபராக கிஷோர் வெளியேற்றப்பட்டார். மேலும், இந்த சீசனில் சிவாங்கி ‘குக்’காவும் களம் இறங்கி உள்ளார். இதனை அடுத்து, சிவாங்கியை காப்பாற்றவே கிஷோரை நிகழ்ச்சி தரப்பு வெளியேற்றி இருக்கிறார்கள் என்ற ரீதியில் ரசிகர்கள் இணையத்தில் கமெண்ட் செய்து வந்தனர்.

இதற்கு கிஷோர் பதில் விளக்கம் கொடுத்துள்ளார். அதில் அவர், ”சிவாங்கியால்தான் நான் வெளியேறினேன் என்பது தவறான செய்தி. இந்த நிகழ்ச்சி மிகவும் பிடித்துப் போய்தான் இதில் பங்கேற்கவே வந்தேன். எனக்கு சமையல் பெரிதாக தெரியாது. ஆனாலும் சமாளித்து விடலாம் என்ற எண்ணத்தில்தான் வந்தேன். ஆனால், அப்படியான ஓரளவு தெரிந்த சமையலை வைத்துக் கொண்டு இந்த நிகழ்ச்சியில் சமாளிப்பது கடினம் என்பதையும் புரிந்து கொண்டேன். நிச்சயம் ஒரு போட்டியாளராக ‘குக் வித் கோமாளி’ செட்டை மிஸ் செய்வேன். மேலும், சிவாங்கி எனக்கு மிகவும் பிடித்த போட்டியாளர்” எனவும் இந்த சர்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in