
‘பொன்னியின் செல்வன்1’ படத்திற்குப் பிறகு தனது சம்பளத்தை உயர்த்தி விட்டதாக வந்த செய்திகளுக்கு நடிகை ஐஷ்வர்ய லக்ஷ்மி விளக்கம் கொடுத்துள்ளார்.
தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான ‘ஜகமே தந்திரம்’ படம் மூலமாக தமிழில் அறிமுகமானவர் நடிகை ஐஷ்வர்ய லக்ஷ்மி. அதன் பிறகு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்1’ படத்தில் பூங்குழலில் கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தார். இந்தக் கதாபாத்திரம் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது. இந்தப் படத்தின் மூலம் கிடைத்த புகழால் தமிழில் அடுத்தப் படத்தில் இருந்து தனது சம்பளத்தை ஐஷ்வர்ய லக்ஷ்மி உயர்த்தி விட்டதாக செய்திகள் வெளியானது. இந்த செய்திகளுக்கு நடிகை ஐஷ்வர்ய லக்ஷ்மி சமீபத்தில் ‘கட்டா குஸ்தி’ நிகழ்ச்சி இசை வெளியீட்டு விழாவில் பகிர்ந்து கொண்டார்.
அதில் இந்த செய்திகளுக்கு அவர் கொடுத்துள்ள விளக்கமாவது, “நான் ‘பொன்னியின் செல்வன்1’ படத்திற்குப் பின் சம்பளத்தை உயர்த்தி விட்டேன் என்று வந்துள்ள செய்திகள் அனைத்தையும் மறுக்கிறேன். ஒரு படம் என்பது முழுக்க முழுக்க இயக்குநரின் பொறுப்பு என்பதை முழுதாக நம்புகிறேன். அதனால், ஒரு படத்தில் என்னுடையக் கதாபாத்திரத் தேவை என்ன என்பதைப் பொறுத்தே நடிக்க ஒப்புக் கொள்வேன். அதற்கேற்ற சம்பளமும் பெறுவேன்” என பதில் கொடுத்துள்ளார் ஐஷ்வர்ய லக்ஷ்மி.