'இந்தி தெரியாதவனெல்லாம் இந்தி படம் எடுக்குறான்’: அட்லீயை கலாய்த்தாரா இயக்குநர் அனுராக் காஷ்யாப்?

'இந்தி தெரியாதவனெல்லாம் இந்தி படம் எடுக்குறான்’: அட்லீயை கலாய்த்தாரா இயக்குநர் அனுராக் காஷ்யாப்?

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான அட்லீயை பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யாப் விமர்சனம் செய்ததாக சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகிறது.

பாலிவுட்டின் முன்னணி இயக்குநராக திகழ்பவர் அனுராக் காஷ்யப். இவர் தமிழில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் வில்லனாக நடித்து அசத்தினார். ‘இந்தி தெரியாதவனெல்லாம் இந்தி படம் எடுக்குறான்’ என்று ஒரு பேட்டியில் அவர் சொன்ன பதில் தற்போது பெரும் சர்ச்சையாகியுள்ளது.

தென்னிந்திய படங்களோடு ஒப்பிடுகையில் பாலிவுட் படங்கள் தொடர்ந்து தோல்வியைத் தழுவுவது ஏன் என அனுராக் காஷ்யப்பிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த அனுராக்,” இங்கு இந்தி தெரியாதவர்கள் எல்லாம் இந்தி படம் எடுத்துக்கிட்டு இருக்காங்க. ஆனால், தென்னிந்தியாவில் அவ்வாறு நடப்பது இல்லை. அது அவர்களின் கலாச்சாரத்தோடு ஒன்றியே இருக்கிறது. வேறு மொழி பேசுபவர்கள் இந்தியில் படம் எடுப்பதால் அது இங்குள்ள மக்களின் கலாச்சாரத்தோடு ஒன்றுவதில்லை. இந்த நிலை மாற வேண்டும். அது மாறினால் தான் இந்தி படங்களுக்கு வெற்றி கிடைக்கும்” என்று அவர் பதிலளித்தார்.


இயக்குனர் அட்லீ பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து ‘ஜவான்’ என்கிற இந்தி படத்தை தற்போது இயக்கி வருகிறார். இவரைத் தான் அனுராக் காஷ்யப் மறைமுகமாகத் தாக்கி இப்படி பேசியதாக நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கூறியுள்ளனர். அதேபோல் ‘ஜெய்பீம்’ இயக்நர் ஞானவேல் விரைவில் ‘தோசா கிங்’ என்கிற இந்தி படத்தை இயக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in