ஷாருக்கான் படத்தைத் தவிர்த்தாரா அல்லு அர்ஜூன்?

ஷாருக்கான் & அல்லு அர்ஜூன்
ஷாருக்கான் & அல்லு அர்ஜூன்ஷாருக்கான் படத்தைத் தவிர்த்தாரா அல்லு அர்ஜூன்?

’புஷ்பா2’ படத்திற்காக நடிகர் அல்லு அர்ஜூன், ஷாருக்கான் படத்தைத் தவிர்த்து இருக்கிறார்.

அட்லி இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான் நடித்து வரக்கூடியத் திரைப்படம் ‘ஜவான்’. இந்தப் படத்தில் நடிகை நயன்தாரா, யோகிபாபு உள்ளிட்டப் பலர் நடித்து வருகின்றனர். சென்னை, மும்பை உள்ளிட்ட இடங்களில் இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. ஏற்கெனவே, இந்தப் படத்தில் நடிகர் விஜய் சிறப்புத்தோற்றத்தில் நடித்து இருக்கிறார் என த் தகவல் வெளியான நிலையில், தற்போது நடிகர் அல்லு அர்ஜூன் இந்தப் படத்தில் கேமியோ கதாபாத்திரத்திற்காக வந்த வாய்ப்பை ’புஷ்பா2’ படத்திற்காகத் தவிர்த்திருக்கிறார்.

‘ஜவான்’ படத்தில் அல்லு அர்ஜூனை நடிக்க அழைப்பு வந்தபோது அந்த சமயத்தில் அவருக்கு ‘புஷ்பா2’ படத்திற்கான பணிகளில் பிஸியாக இருந்ததால் இந்த வாய்ப்பை ஏற்க முடியாமல் தவிர்த்திருக்கிறார். ’அல்லு அர்ஜூனுக்கு ’ஜவான்’ படத்தில் இந்த கதாபாத்திரத்தை ஏற்பதற்கு விருப்பம் இருந்தாலும் ‘புஷ்பா2’ பட வேலைகள் காரணமாக அதைத் தவிர்க்க நேர்ந்தது’ என்கிறது படக்குழு. இந்த வருடம் ஜூன் 3-ம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தில் விஜய்சேதுபதி எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in