`துணிவு’ படத்தில் சண்டைக் காட்சிகளுக்கு டூப் பயன்படுத்திய அஜித்?

`துணிவு’ படத்தில் சண்டைக் காட்சிகளுக்கு டூப் பயன்படுத்திய அஜித்?

’துணிவு’ படத்தில் நடிகர் அஜித் சண்டைக் காட்சிகளுக்கு டூப் பயன்படுத்தி இருக்கிறாரா என்ற கேள்விக்கு ஜிப்ரான் விடையளித்துள்ளார்.

போனி கபூர் தயாரிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்திருக்கும் ‘துணிவு’ திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளியாக இருக்கிறது. படத்தின் முதல் பாடலான ‘சில்லா சில்லா’ வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு ‘துணிவு’ படத்தில் அஜித்தைப் போலவே தோற்றமளிக்கும் நபர் ஒருவருடன் அஜித் எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரலானது. மேலும், அஜித் சண்டைக் காட்சிகளுக்கு டூப் போட்டிருக்கிறாரா என்ற கேள்வியும் வந்தது.

இதனை இசையமைப்பாளர் ஜிப்ரான் தனது சமீபத்திய பேட்டி ஒன்றில் மறுத்துள்ளார். சண்டைக் காட்சிகள் அனைத்திற்கும் நடிகர் அஜித்தே ரிஸ்க் எடுத்து சண்டை போட்டுள்ளதாகத் தெரிவித்து இருக்கிறார். மேலும், ‘துணிவு’ படத்தில் அறிமுகப் பாடல், கதையோட்டத்தில் அமைந்த மற்ற இரண்டு பாடல்கள் என மொத்தம் மூன்று பாடல்கள் இருக்கிறது எனவும் கூறியிருக்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in