மகனின் பிறந்தநாளை நீச்சல் குளத்தில் கொண்டாடினாரா நடிகை சினேகா?

மகனின் பிறந்தநாளை நீச்சல் குளத்தில் கொண்டாடினாரா நடிகை சினேகா?

நடிகை கே.ஆர்.விஜயாவிற்கு அடுத்து புன்னகை அரசி எனப் பெயர் எடுத்தவர் நடிகை சினேகா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். 'ஆனந்தம்', 'உன்னை நினைத்து', 'புதுப்பேட்டை', 'வசூல்ராஜா எம்பிபிஎஸ்', 'ஆட்டோகிராஃப்' உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தார்.

கடந்த 2013-ம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதலித்து சினேகா திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பின் படங்களைத் தேர்ந்தெடுத்து சினேகா நடித்து வருகிறார்.

இந்த தம்பதிக்கு விஹான் என்ற மகனும், ஆதயந்தா என்ற மகனும் உள்ளனர். தனது குடும்பத்தாருடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை சினேகா அடிக்கடி பகிர்ந்து கொள்வார்.

தற்போது தனது மகன், மகளுடன் அவர் நீச்சல் குளத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை அவர் பகிர்ந்துள்ளார். அத்துடன் அதில், தனது மகன் விஹானுக்கு பிறந்தநாள் வாழ்த்தையும் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in