நயன்தாராவுடன் மீண்டும் இணையும் இயக்குநர்

நயன்தாராவுடன் மீண்டும் இணையும் இயக்குநர்

நயன்தாரா நடிக்கும் படத்தை மீண்டும் இயக்கப் போவதாக பிரபல இயக்குநர் தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கில் கவனம் செலுத்தி வரும் நடிகை நயன்தாரா, அட்லீ இயக்கும் படத்தின் மூலம் இந்திக்கும் செல்கிறார். இப்போது 02, கனெக்ட், தெலுங்கில் காட்ஃபாதர் ஆகிய படங்களில் நடித்துள்ள நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவனை அடுத்த மாதம் 9-ம் தேதி திருமணம் செய்கிறார்.

லவ் ஆக்‌ஷன் டிராமா படப்பிடிப்பில் நயன்தாரா, தியான் சீனிவாசன்
லவ் ஆக்‌ஷன் டிராமா படப்பிடிப்பில் நயன்தாரா, தியான் சீனிவாசன்

இதற்கிடையே நயன்தாரா நடிக்கும் படத்தை மீண்டும் இயக்கப் போவதாக மலையாள நடிகரும் இயக்குநருமான தியான் சீனிவாசன் தெரிவித்துள்ளார். மலையாள நடிகர் சீனிவாசனின் மகனான தியான், நயன்தாரா, நிவின் பாலி நடித்த ’லவ் ஆக்‌ஷன் டிராமா’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

அந்தப் படம் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. இதையடுத்து மீண்டும் அவருடன் ஒரு படத்தில் இணைந்து பணியாற்ற இருப்பதாக தியான் தெரிவித்துள்ளார். நயன்தாரா மீது தனக்கு அதிக மரியாதை உண்டு என்றும் தன்னை அவர் சகோதரனாகக் கருதுவதாகவும் தெரிவித்துள்ள தியான் , மீண்டும் ஒரு படத்தில் இணைந்து பணிபுரியலாம் என்று அவர் கூறியதாகவும் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.