ஒருவழியா வந்தாச்சு... ’துருவ நட்சத்திரம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

’துருவ நட்சத்திரம்’ விக்ரம்...
’துருவ நட்சத்திரம்’ விக்ரம்...

’துருவ நட்சத்திரம்’ படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கெளதம் மேனன் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம், ஐஸ்வர்யா ராஜேஷ், ரிது வர்மா ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் ‘துருவ நட்சத்திரம்’. படம் ஆரம்பித்து கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் ஆகியும் சில பிரச்சினைகள் காரணமாக வெளிவராமல் உள்ளது. இந்நிலையில், கடந்த வருட இறுதியில் திரைப்படம் வெளிவரும் என இயக்குநர் கெளதம் மேனன் அறிவித்தார். அதன்படி தற்போது இந்தத் திரைப்படம் இந்த வருடம் நவம்பர் மாதம் 24ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

’துருவ நட்சத்திரம்’ படத்தின் புதிய போஸ்டர்...
’துருவ நட்சத்திரம்’ படத்தின் புதிய போஸ்டர்...

அதன் படி, தற்போது புதிய போஸ்டர் ஒன்றும் டிரெய்லர் ஒன்றும் வெளியாகியுள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் நடிகர்கள் சிம்ரன், ராதிகா, சதீஷ் உள்ளிட்டப் பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in