
இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில், நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் திரைப்படம் ‘மகான்’. வாணி போஜன், சிம்ரன், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடிக்கும் இத்திரைப்படத்தில், விக்ரம் கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் சில வாரங்களுக்கு முன்பு வெளியானது. தற்போது இத்திரைப்படத்தில், துருவ் விக்ரமின் கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. ‘தாதா’ என்ற கதாபாத்திரத்தில் துருவ் விக்ரம் நடிக்கிறார். இத்தகவலை ட்விட்டரில் பகிர்ந்து, ‘மகானின் மகன் தாதா’ என்று பதிவிட்டுள்ளார் இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ். தற்போது அவருடைய ஃபர்ஸ்ட் லுக் இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.