துருவ் விக்ரம்- மாரிசெல்வராஜ் படம் விரைவில் துவக்கம்?

துருவ் விக்ரம்- மாரிசெல்வராஜ்
துருவ் விக்ரம்- மாரிசெல்வராஜ்

இயக்குநர் மாரிசெல்வராஜ் அடுத்து துருவ் விக்ரமுடன் இணையும் புதிய திரைப்படம் விரைவில் தொடங்க இருக்கிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னால் இயக்குநர் மாரிசெல்வராஜ். நடிகர் துருவ் விக்ரமுடன் இணைந்து படம் இயக்க இருப்பதை அறிவித்தார். பின்பு, மாரிசெல்வராஜ் உதயநிதி ஸ்டாலினுடன் ‘மாமன்னன்’ படத்தில் பிஸியாக இருந்தார். நடிகராக உதயநிதி ஸ்டாலினின் கடைசிப் படம் இது என்பதால் ப்ரீ புரொடக்‌ஷன் பணிகள் முழு வேகத்தில் நடந்து வருகிறது. இதற்கிடையில், ‘வாழை’ படத்திலும் மாரிசெல்வராஜ் கவனம் செலுத்தி வந்தார்.

இன்னொரு பக்கம் நடிகர் துருவ் விக்ரம் தன்னுடைய மியூசிக்கல் ஆல்பத்தை வெளியிட்டார். இப்போது, மாரிசெல்வராஜ்- துருவ் விக்ரம் கூட்டணி இணைய இருக்கிறது. புதிய படத்துக்காக தான் தயாராகிக் கொண்டிருப்பதாக துருவ் விக்ரம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

‘மஹான்’ படத்தில் துருவ் விக்ரம் தன்னுடைய தந்தையும் நடிகருமான விக்ரமுடன் இணைந்து நடித்தார். விக்ரம் தற்போது, இரஞ்சித்தின் ‘தங்கலான்’ படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in