
தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் தொடக்கப் பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டு தரம் குறித்து ஆய்வு செய்தார்.
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே பங்குநத்தம் கொட்டாய் பகுதியில் ஊராட்சி தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளிக்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.5 லட்சம் மதிப்பில் சுற்றுச்சுவர் கட்டுமான பணி பூமிபூஜை இன்று நடந்தது.
இதில் பங்கேற்க தருமபுரி பாமக சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன் பள்ளிக்கு வந்தார். பூமி பூஜைக்கு பின் மாணவ, மாணவிகளுடன் உரையாடி பள்ளிக்கான தேவைகள் குறித்து கேட்டறிந்து, நிறைவேற்றி வைக்க தயாராக உள்ளதாக ஆசிரியர்களிடம் உறுதியளித்தார். அப்போது பள்ளியில் வழங்கிய மதிய உணவை மாணவர்களுடன் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன் அமர்ந்து சாப்பிட்டார். இதே தரத்தில் தினமும் உணவு வழங்கப்படுகிறதா எனவும் அப்போது மாணவர்களிடம் கேட்டறிந்தார். மதிய உணவிற்கான அரிசியை மேலும் தரமானதாக வழங்க விடுத்த கோரிக்கையை ஏற்று அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார்.