தனுஷின் ’வாத்தி’ படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்

தனுஷுக்கு ஜோடி ‘தீவண்டி’ படப்புகழ் சம்யுக்தா மேனன்
தனுஷின் ’வாத்தி’ படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்
வாத்தி தொடக்க விழாவில் தனுஷ்

நடிகர் தனுஷ் நடிக்கும் 'வாத்தி’ படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது.

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் படம் 'மாறன்'. சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு இசை ஜி.வி.பிரகாஷ். இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படம் ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாகவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து நாளை மறுநாள்(ஜன.5) படப்பிடிப்பு தொடங்கவுள்ள தனுஷின் 2-வது பான் இந்தியா படமான ‘வாத்தி’க்காக இன்று பூஜை போடப்பட்டுள்ளது. இப்படத்தை தெலுங்கு திரை உலக இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்குகிறார். இவர், ‘தோழி பிரேமா’, ‘மிஸ்டர் மஜ்னு’, ‘ரங் தே’ படங்களை இயக்கியுள்ளார். இந்தப் படத்துக்கும் இசை ஜி.வி பிரகாஷ்.

தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இப்படத்தின் தெலுங்கு தலைப்பு ‘சார்’ என்று வைக்கப்பட்டுள்ளது. தனுஷுக்கு ஜோடியாக ‘தீவண்டி’ படப்புகழ் சம்யுக்தா மேனன் நடிக்கிறார்.

மித்ரன் ஜவகரின் ‘திருச்சிற்றம்பலம்’, கார்த்திக் நரேனின் ‘மாறன்’, செல்வராகவனின் ‘நானே வருவேன்’ உள்ளிட்டப் படங்களில் தற்போது நடித்துவரும் தனுஷ் அடுத்ததாக,சேகர் கம்முலா, மாரி செல்வராஜ், ராம்குமார், அருண் மாதேஸ்வரன் உள்ளிட்டோரின் பெயரிடாதப் படங்களிலும் நடிக்கவிருக்கிறார்.

Related Stories

No stories found.