தனுஷின் ‘மாறன்’; நேரடியாக ஹாட் ஸ்டாரில் வெளியாகிறது

தனுஷின் ‘மாறன்’; நேரடியாக ஹாட் ஸ்டாரில் வெளியாகிறது
’மாறன்’ தனுஷ்

தனுஷ் நடித்துள்ள ’மாறன்’ திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாக இருக்கிறது.

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம், ’மாறன்’. தனுஷ் ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். மற்றும் சமுத்திரகனி, ஸ்மிருதி வெங்கட், மாஸ்டர் மகேந்திரன், அமீர் உள்பட பலர் நடித்துள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ் இசைஅமைத்துள்ள இந்தப் படத்துக்கு, விவேகானந்தன் சந்தோஷம் ஒளிப்பதிவு செய்துள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் டிஜி தியாகராஜன் தயாரித்துள்ளார்.

’மாறன்’ தனுஷ்
’மாறன்’ தனுஷ்

இந்தப் படம் ஓடிடியில் நேரடியாக வெளியாக இருப்பதாகக் கூறப்பட்டு வந்த நிலையில், அதை தயாரிப்பு நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் அடுத்த மாதம் படம் வெளியாகும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தனுஷ் பத்திரிகையாளராக நடித்திருக்கிறார்.

இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் இன்று (ஜன.14) மாலை வெளியிடப்பட்டது. வெளியான சிறிது நேரத்திலேயே சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த, ஜகமே தந்திரம், இந்தியில் உருவான ‘அட்ரங்கி ரே’படங்களைத் தொடர்ந்து, தனுஷின் ’மாறன்’ படமும் ஓடிடியில் வெளியாகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in