'ஹே சினாமிகா’ படத்தின் காப்பியா நடிகர் தனுஷ் பட போஸ்டர்?: சர்ச்சையான 'திருச்சிற்றம்பலம்’

'ஹே சினாமிகா’ படத்தின் காப்பியா நடிகர் தனுஷ் பட போஸ்டர்?: சர்ச்சையான 'திருச்சிற்றம்பலம்’

நடிகர் தனுஷ் நடித்துள்ள ‘திருச்சிற்றம்பலம்’ பட போஸ்டர், துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ‘ஹே சினாமிகா’ பட போஸ்டரின் காப்பி என சமூக ஊடகங்களில் விவாதம் கிளம்பியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் ஹாலிவுட் நடிகர்களுடன் இணைந்து நடித்த ‘ தி கிரே மேன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது, அதில்
நடிகர் தனுஷின் நடிப்பு பரவலாக பேசப்பட்டது. இதற்கிடையே தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான ‘மாறன்’ மற்றும்’ ஜகமே தந்திரம்’ உள்ளிட்ட திரைப்படங்கள் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகியது. ஆனால், அவரது ரசிகர்கள் மத்தியில் இப்படங்கள் வரவேற்பை பெறவில்லை.

இந்த நிலையில் அவர் அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் நடித்து வருகிறார். அவருடன் ராசி கண்ணா, பிரியா பவானி ஷங்கர், நித்யா மேனன், பிரகாஷ் ராஜ், பாரதிராஜா என பலர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் பாடல்கள் வெளியாகியுள்ளது.

இப்படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடலான ‘பழம்’ பாடல் ரிலீஸ் குறித்த அறிவிப்பு போஸ்டருடன் வெளியாகியுள்ளது. ஆனால், இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.

‘திருச்சிற்றம்பலம்’ போஸ்டர், துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ‘ஹே சினாமிகா’ பட போஸ்டரின் காப்பி என்றும், ஒரே டிசைனில் தனுஷ் பட போஸ்டர் உருவாக்கப்பட்டுள்ளதாக இணையதளவாசிகள் கடுமையான விமர்சனத்தை முன் வைத்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in