தனுஷ் நடித்துள்ள ‘வாத்தி’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தனுஷ் நடித்துள்ள ‘வாத்தி’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘வாத்தி’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தனுஷ் நடிப்பில் வெங்கி அட்ரிலு இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வாத்தி’ திரைப்படம் டிசம்பர் மாதம் 2ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் 'வாத்தி' படத்தில் நடித்துள்ளார் தனுஷ். இந்தப் படம் தெலுங்கில் 'சார்' என்ற பெயரில் உருவாகியுள்ளது. வெங்கி அட்லூரி இயக்கும் இந்தப் படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் நாக வம்சி தயாரித்துள்ளார். தனுஷ் ஜோடியாக, சம்யுக்தா மேனன் நடித்துள்ளார். மேலும், சமுத்திரக்கனி, தணிகலபரணி உட்பட பலரும் படத்தில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

ஏற்கெனவே ‘வாத்தி' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீஸர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘ நானே வருவேன்’ திரைப்படம் இந்த மாத இறுதியில் வெளியாக உள்ளது. கடந்த மாதம் தனுஷ் நடிப்பில் வெளியான ‘திருச்சிற்றம்பலம்’ படமும் வெற்றி பெற்றுள்ளது. அடுத்தடுத்து தனுஷ் நடித்த படங்கள் வெளியாகவுள்ளதால், அவரின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in