இன்று மாலை வெளியாகிறது தனுஷின் ’மாறன்’

இன்று மாலை வெளியாகிறது தனுஷின் ’மாறன்’

தனுஷ் நடித்துள்ள `மாறன்' திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் இன்று மாலை வெளியாகிறது.

சத்ய ஜோதி பிலிம்ஸ் சார்பில் டி.ஜி.தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன் தயாரித்துள்ள படம், ’மாறன்’. புலனாய்வு பத்திரிகையாளராக தனுஷ் நடித்துள்ள இந்தப் படத்தை கார்த்திக் நரேன் இயக்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

தனுஷ், மாளவிகா மோகனன்
தனுஷ், மாளவிகா மோகனன்

கதாநாயகியாக, மாளவிகா மோகனன் நடித்திருக்கிறார். சமுத்திரக்கனி, கிருஷ்ண குமார், மாஸ்டர் மகேந்திரன், ஜெயபிரகாஷ், ஆடுகளம் நரேன் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் டிரெய்லரை, ட்விட்டர் தளத்தின் புதிய வசதியை பயன்படுத்தி ரசிகர்கள் வெளியிட்டனர்.

டிரெய்லர், பாடல்கள் வரவேற்பை பெற்ற நிலையில், இந்தப் படம், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது.

Related Stories

No stories found.