தனுஷின் அடுத்த திரைப்படம் ‘வாத்தி’

தனுஷின் அடுத்த திரைப்படம் ‘வாத்தி’

தற்போது பாலிவுட்டில் ‘அட்ராங்கி ரே’ என்கிற திரைப்படத்திலும், ‘தி க்ரே மேன்’ என்ற ஹாலிவுட் திரைப்படத்திலும் நடித்து முடித்திருக்கும் நடிகர் தனுஷ், அடுத்தடுத்து ‘மாறன்’, ‘திருச்சிற்றம்பலம்’, ‘நானே வருவேன்’ என்று 3 தமிழ்த் திரைப்படங்களில் நடித்துவருகிறார். இதைத் தொடர்ந்து, தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகவுள்ள திரைப்படத்தில் தனுஷ் நடிக்கவிருக்கிறார் என்று சில வாரங்களுக்கு முன்பு செய்திகள் வெளியாகின.

தற்போது அத்திரைப்படத்தைப் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தெலுங்கில் ‘தோழி ப்ரேமா’, ‘மிஸ்டர் மஞ்சு’ போன்ற திரைப்படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கத்தில், தனுஷ் ‘வாத்தி’ என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். தெலுங்கில் இத்திரைப்படம் ‘சார்’ என்ற பெயரில் வெளியாகவுள்ளது.

நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்யா தயாரிப்பில் உருவாகவுள்ள இத்திரைப்படத்துக்கு, ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்க உள்ளார். தற்போது இத்திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.