‘ராக்கி’ அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிக்கிறாரா தனுஷ்?

‘ராக்கி’ அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிக்கிறாரா தனுஷ்?

சில தினங்களுக்கு முன்பு வெளியான ‘ராக்கி’ திரைப்படம் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. காதல், ‘ராக்கி’ திரைப்படம் வெளியாவதற்கு முன்பே அருண் மாதேஸ்வரன் ‘சாணிக்காயிதம்’ படத்தை இயக்கி முடித்துள்ளார் அருண் மாதேஸ்வரன். செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் இத்திரைப்படம் வரும் ஜனவரியில் வெளியாகவுள்ளது. ‘ராக்கி’ திரைப்படம் போலவே இத்திரைப்படத்தில் வன்முறை பிரதானமாக இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அருண் மாதேஸ்வரன் அடுத்து தனுஷ் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது. தனுஷ் தற்போது அவரது அண்ணன் செல்வராகவனின் இயக்கத்தில் ‘நானே வருவேன்’ திரைப்படத்தில் நடித்துவருகிறார். மேலும், வெங்கி அட்லூரி இயக்கத்தில் நேரடித் தெலுங்குப் படத்திலும் தனுஷ் நடிக்கவுள்ளார்.

அதைத் தொடர்ந்து தனுஷ் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.