நடிகர் போண்டாமணிக்கு உதவி செய்த தனுஷ்: வீடியோ வெளியிட்டு நெகிழ்ச்சி

நடிகர் போண்டாமணிக்கு உதவி செய்த தனுஷ்: வீடியோ வெளியிட்டு நெகிழ்ச்சி

மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நகைச்சுவை நடிகர் போண்டாமணிக்கு, நடிகர் தனுஷ் ரூபாய் 1 லட்சம் வழங்கி உதவி செய்துள்ளார்.

சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்ட நிலையில் நகைச்சுவை நடிகர் போண்டாமணி சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகிறார். இந்த நிலையில் மருத்துவம் செய்ய வசதியின்றி போண்டாமணி தவிப்பதாக, சக நடிகர் பெஞ்சமின் சில நாட்களுக்கு முன்பு வெளியிட்ட கண்ணீர் வீடியோ அனைவரையும் கலங்க வைத்தது. இதனைத் தொடர்ந்து தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், போண்டாமணியை நேரில் சந்தித்து சிகிச்சைக்கான செலவை மருத்துவக்காப்பீட்டுத் திட்டம் மூலம் அரசு ஏற்கும் என உறுதியளித்தார்.

இதனைத்தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி போண்டாமணிக்கு ஒரு லட்சம் ரூபாய் அளித்து உதவி செய்தார். நடிகர் மனோபாலா நேரில் சந்தித்து ஆறுதல் கூறி உதவி செய்தார். நடிகர் வடிவேலுவும் போண்டாமணிக்கு உதவி செய்வேன் என தெரிவித்துள்ளார். இந்த நிலையில் நடிகர் தனுஷ், போண்டாமணிக்கு ரூ.1 லட்சம் அளித்து உதவியுள்ளார். இது குறித்து வீடியோ வெளியிட்டுள்ள போண்டாமணி, “ வணக்கம் தம்பி தனுஷ். நீங்கள் கொடுத்த ஒரு லட்சம் ரூபாய் பணம் வந்து சேர்ந்தது. என் சார்பிலும், என் குடும்பம் சார்பிலும் நன்றி. நீங்கள் அனுப்பிய பணம் இந்த நேரத்தில் பெரும் உதவியாக உள்ளது. எனக்கு அனைவரும் உதவி செய்வது பெருமையாக உள்ளது” என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in