உணவு நிறுவன ஊழியர்களுக்கு இலவச பெட்ரோல்: தனுஷ் ரசிகர்களின் `திருச்சிற்றம்பலம்' பரிசு

உணவு நிறுவன ஊழியர்களுக்கு இலவச பெட்ரோல்: தனுஷ் ரசிகர்களின் `திருச்சிற்றம்பலம்' பரிசு

நடிகர் தனுஷ் நடிப்பில் திருச்சிற்றம்பலம் திரைப்படம் திரையரங்குகளில் இன்று வெளியாகி உள்ளது. இதை கொண்டாடும் வகையில் நடிகர் தனுஷின் ரசிகர்கள் செய்த செயல் பலரது பாராட்டுக்களையும் பெற்றுவருகிறது.

தமிழ்த்திரையுலகில் தனக்கென அதிக ரசிகர்களைக் கொண்டிருப்பவர் தனுஷ். இவரது நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் படம் கடந்த ஆண்டு திரைக்குவந்தது. அதற்குப்பின்பு தனுஷ் நடித்த ஜகமே தந்திரம், மாறன், இந்தி மற்றும் தமிழில் வெளியான அத்ராங்கிரே, தி கிரே மேன் ஆகிய படங்கள் ஓடிடி தளத்திலேயே வெளியானது. இந்நிலையில், ஓராண்டிற்குப் பின்பு தனுஷ் நடிப்பில், இன்று திரையரங்குகளில் திருச்சிற்றம்பலம் வெளியாகி உள்ளது.

இந்தப்படத்தில் நடிகர் தனுஷ் உணவு டெலிவரிமேனாக நடித்துள்ளார். இதை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்ட தனுஷ் ரசிகர் மன்றத் தலைவர் காமராஜ் தலைமையில் திரண்ட தனுஷ் ரசிகர்கள் சொமேட்டோ, ஸ்விகி உணவு நிறுவனங்களின் டெலிவரி பாய்களைத் திரட்டி, அவர்களுக்குத் தலா ஒரு லிட்டர் பெட்ரோலை இலவசமாக வினியோகித்தனர். வழக்கமாக தங்கள் மனம் கவர்ந்த நடிகர்களின் படங்களுக்கு பிளக்ஸ், பேனர் என ரசிகர்கள் வைப்பது வழக்கம். அதற்கு மாற்றாக தனுஷ் ரசிகர்கள் செய்த இந்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in