‘பொன்னியின் செல்வன்’ படத்துடன் மோதும் தனுஷ்: ‘நானே வருவேன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

‘பொன்னியின் செல்வன்’ படத்துடன் மோதும் தனுஷ்: ‘நானே வருவேன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

‘பொன்னியின் செல்வன்’ படத்துடன் தனுஷ் நடித்துள்ள ‘நானே வருவேன்’ திரைப்படம் மோதவுள்ளது. இப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மணிரத்னம் இயக்கத்தின் உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் ஆகியோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் வரும் செப்டம்பர் 30 ம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் ட்ரெய்லர், பாடல்கள், போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதால், படத்தின் மீதான ஆர்வமும் அதிகரித்துள்ளது.

தனுஷ், செல்வராகவன், யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் ‘காதல்கொண்டேன்’, ‘புதுப்பேட்டை’ போன்ற மாஸ்ஹிட் படங்கள் வெளியாகியுள்ளது. தற்போது பல ஆண்டுகளுக்கு பிறகு இதே கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ’நானே வருவேன்’. ஹீரோ, வில்லன் என இரண்டு வித்தியாசமான கேரக்டர்களில் தனுஷ் நடித்துள்ள இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த படத்தின் சிங்கிள் பாடல் மற்றும் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் தனுஷ், எல்லி அவ்ரம், இந்துஜா ரவிச்சந்திரன், யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ள இந்த படம், ‘பொன்னியின் செல்வன்’ பட ரிலீஸ்க்கு ஒரு நாள் முன்னதாக செப்டம்பர் 29ம் தேதியே வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும் எதிர்பார்ப்புடன் உள்ள இரண்டு படங்களும் ஒரே சமயத்தில் வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in