பார்த்திபனின் 'இரவின் நிழல்’ ரிலீஸ் தேதியை வெளியிட்டார் தனுஷ்!

பார்த்திபனின் 'இரவின் நிழல்’ ரிலீஸ் தேதியை வெளியிட்டார் தனுஷ்!

பார்த்திபனின் ’இரவின் நிழல்’ படத்தின் ரிலீஸ் தேதியை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார்.

பார்த்திபன் இயக்கி, நடித்துள்ள படம் ’இரவின் நிழல்’. வரலட்சுமி சரத்குமார், ஆனந்த கிருஷ்ணன், பிரிஜிதா சாகா, ரோபோ சங்கர் உட்பட பலர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார்.

இந்தப் படம், ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டுள்ள நான்லீனியர் திரைப்படம். இந்த முறையில், இந்தியாவில் எடுக்கப்பட்டுள்ள முதல் திரைப்படம் இது. படத்தை இந்த மாதம் 24-ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர். கமல்ஹாசனின் 'விக்ரம்' தொடர்ந்து ஓடிக்கொண்டிருப்பதால், இந்தப் படத்தின் ரிலீஸ், அடுத்த மாதத்துக்குத் தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியை நடிகர் தனுஷ் இன்று அறிவித்து, படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதன்படி படம் ஜூலை 15-ம் தேதி வெளியாகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in