ஏழு வருடத்திற்கு பிறகு மேடையில் இணையும் தனுஷ்- அனிருத்!

ஏழு வருடத்திற்கு பிறகு மேடையில் இணையும் தனுஷ்- அனிருத்!

’திருச்சிற்றம்பலம்’ படத்திற்காக நடிகர் தனுஷ் மற்றும் அனிருத் இருவரும் மேடையில் இணைந்து பாட போகிறார்கள் என தகவல் வந்துள்ளது.

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் நடிகர் தனுஷ், நித்யா மேனன், ராஷி கண்ணா உள்ளிட்ட பலர் நடித்திருக்க கூடிய திரைப்படம் ‘திருச்சிற்றம்பலம்’. இந்த படம் அடுத்த மாதம் அதாவது ஆகஸ்ட் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. கிட்டத்தட்ட ஏழு வருடங்களுக்கு பிறகு நடிகர் தனுஷ் மற்றும் அனிருத் இந்த படத்தில் இணைகிறார்கள். படத்தில் இருந்து ஏற்கெனவே, ‘தாய்க்கெழவி’, ‘மேகம் கருக்காதா’, ‘லைஃப் ஆஃப் பழம்’ ஆகிய மூன்று பாடல்கள் வெளியாகி இருக்கின்றன.

இந்நிலையில் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் இருக்கக்கூடிய தனியார் கல்லூரி ஒன்றில் பிரம்மாண்டமாக இந்த மாத இறுதியில் நடக்க இருக்கிறது. இதற்காக நடிகர் தனுஷ் மற்றும் அனிருத் இருவரும் இணைந்து மேடையில் பாடல் பாட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது அனிருத் -தனுஷ் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. அனிருத்தின் அறிமுக படமான ‘3’-ல் தொடங்கி ’வேலையில்லா பட்டதாரி’, ‘தங்கமகன்’, ‘மாரி’ என பல படங்களில் இவர்களது இணை ரசிகர்களுக்கு பிடித்திருந்தது. இப்போது கிட்டத்தட்ட ஏழு வருடங்களுக்கு பிறகு ‘திருச்சிற்றம்பலம்’ படத்திற்காக தனுஷ்- அனிருத் இருவரும் இணைந்திருக்கிறார்கள். அதிலும் பாடல் வெளியீட்டு விழாவில் இருவரும் இணைந்து பாட இருக்கிறார்கள் என்பது ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.

இன்று நடிகர் தனுஷின் 39வது பிறந்தநாள். இதனை ஒட்டியே நேற்று ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் இருந்து மூன்றாவது பாடல் வெளியானது. மேலும் தமிழ்- தெலுங்கு என பைலிங்குவலாக அவர் நடித்து வரும் ‘வாத்தி’ படத்தின் டீசரும் இன்று மாலை ஆறு மணிக்கு வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in