தனுஷும் ஐஷ்வர்யாவும் திருமண நாளில் மீண்டும் சேர்கிறார்களா?

தனுஷும் ஐஷ்வர்யாவும் திருமண நாளில் மீண்டும் சேர்கிறார்களா?

நடிகர் தனுஷ் மற்றும் ஐஷ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் மீண்டும் தாங்கள் சேர இருக்கும் செய்தியை அறிவிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகர் தனுஷ் மற்றும் ஐஷ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் தாங்கள் கணவன் மனைவி என்ற உறவில் இருந்து பிரிய இருப்பதாக சமூக வலைதளம் மூலமாக அதிகாரபூர்வமாக அறிவித்தார்கள். திரையுலகை சேர்ந்தவர்களுக்கும் அவர்களது ரசிகர்களுக்கும் அதிர்ச்சியான விஷயமாக இருந்தது இவர்களது இந்த விவாகரத்து செய்தி.

இந்த அறிவிப்புக்குப் பிறகு ஐஷ்வர்யா ரஜினிகாந்த் ஒரு பக்கம் ‘பயணி’ மியூசிக்கல் வீடியோ, பாலிவுட் பட இயக்கம் என இயக்குநராக மீண்டும் தனது வேலைகளில் மும்முரமானார். இன்னொரு பக்கம் நடிகர் தனுஷூம் ‘நானே வருவேன்’, ‘வாத்தி’, ‘திருச்சிற்றம்பலம்’, ‘க்ரேமேன்’ என கோலிவுட்டில் இருந்து பாலிவுட், ஹாலிவுட் என படங்களில் பிஸியாக இருக்கிறார்.

மகன்கள் யாத்ரா, லிங்கா இருவரும் தனுஷ் மற்றும் ஐஷ்வர்யா இருவரிடமும் மாறி மாறி இருந்து வருகிறார்கள். ‘க்ரேமேன்’ படத்திற்காக அமெரிக்காவில் தனுஷூடன் லிங்கா மற்றும் யாத்ரா இருவரும் சென்றிருந்தார்கள். இதனிடையே, சென்னையில் தனுஷ்- ஐஷ்வர்யாவுக்கு சொந்தமான அப்பார்ட்மென்டில் தனுஷ், ஐஷ்வர்யா இருவரும் சந்தித்து வருவதாகவும், குழந்தைகள் எதிர்காலம் தொடர்பான முக்கிய முடிவுகள் குறித்து இருவரும் பேசி வருவதாகவும் முன்பு தகவல் வெளியானது.

இருவரும் மறுபடியும் இணைந்து வாழ வேண்டும் என ரஜினி தரப்பிலும் தனுஷ் தரப்பிலும் பேச்சு வார்த்தை நடந்து வந்தாலும் பிரிய வேண்டும் என்பதில் ஐஷ்வர்யா உறுதியாக இருக்கிறார் எனவும் சொல்லப்பட்டது.

இந்த நிலையில் வருகிற நவம்பர் மாதம் இருவருக்கும் 18-வது திருமண நாள் வர இருக்கிறது. இதனை ஒட்டி தனுஷ்- ஐஷ்வர்யா இருவரும் மீண்டும் இணைய போவதாகவும் தனுஷ் விடுத்த அழைப்பின் பேரிலேயே ஐஷ்வர்யா இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால், இதற்கான வாய்ப்புகள் குறைவு எனவும் சொல்கிறது சினிமா வட்டாரம். எனினும் இது குறித்து உறுதிப்படுத்தப்பட்ட அறிவிப்புகள் எதுவும் இதுவரை தனுஷ் தரப்பிலோ அல்லது ஐஷ்வர்யா தரப்பிலோ வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in