இந்திப் படத்துக்கு இசை அமைக்கிறார் தேவி ஸ்ரீ பிரசாத்

இந்திப் படத்துக்கு இசை அமைக்கிறார் தேவி ஸ்ரீ பிரசாத்

இந்தி படத்துக்கு இசை அமைக்க இருப்பதாக இசை அமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் தெரிவித்துள்ளார்.

பிரபல இசை அமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், தமிழ், தெலுங்கில் இசை அமைத்து வருகிறார். தமிழில், சச்சின், வில்லு, கந்தசாமி, சிங்கம், வீரம் உட்பட பல படங்களுக்கு இசை அமைத்துள்ளார். இவர் பாடல்களின் டியூன் இந்தி படங்களில் பயன்படுத்துள்ளன. சமீபத்தில் இவர் இசையில் வெளியான ’புஷ்பா’ பட பாடல்கள் சூப்பர் ஹிட்டாயின. தெலுங்கு, தமிழ் மட்டுமின்றி இந்தியில் இந்தப் பாடல்கள் வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்நிலையில், அவர் நேரடி இந்திப் படத்துக்கு இசை அமைக்க இருக்கிறார்.

இதை பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ள தேவி ஸ்ரீ பிரசாத், என்ன படம், யார் இயக்கப் போகிறார்கள் என்ற தகவல்களை தெரிவிக்கவில்லை. பிரபல இந்தி ஹீரோ வருண் தாவன் நடிக்கும் படத்துக்கு அவர் இசை அமைக்க இருப்பதாக பாலிவுட்டில் கூறப்படுகிறது.

இந்தப் படத்தை சஜித் நதியத்வாலா தயாரிக்க, நிதேஷ் திவாரி இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.

தேவி ஸ்ரீ பிரசாத், லிங்குசாமி இயக்கத்தில் ராம் பொத்தினேனி நடிக்கும் ’த வாரியர்’ உட்பட சில படங்களுக்கு இப்போது இசை அமைத்து வருகிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in