‘ஊ சொல்றியா மாமா...’ சர்ச்சை: என்ன சொல்கிறார் தேவி ஸ்ரீ பிரசாத்?

இசை அமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்
இசை அமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்

’புஷ்பா’ படத்தில் இடம்பெற்றுள்ள ’ஓ சொல்றியா மாமா’ பாடலுக்கான சர்ச்சை தேவையற்ற ஒன்று என்று. இசை அமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் கூறியுள்ளார்.

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வெளியாகி வரவேற்பைப் பெற்றிருக்கும் படம், புஷ்பா. ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், தனஞ்செயா, சுனில் உட்பட பலர் நடித்திருக்கும் இந்தப் படத்துக்கு, தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்துள்ளார். இதில் இடம்பெற்றுள்ள பாடல்கள் அனைத்தும் ஹிட் என்றாலும் சமந்தா ஆடியுள்ள, ’ஊ சொல்றியா மாமா’ என்ற அய்ட்டம் பாடல் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தப் பாடல் ஆண் சமூகத்தைக் கொச்சைப்படுத்துவதாகக் கூறி, ஆந்திராவில் ஆண்கள் சங்கம் ஒன்று வழக்குத் தொடுத்திருக்கிறது.

இந்தப் பாடல் சர்ச்சையானது குறித்து இதுவரை ஏதும் சொல்லாத, இசை அமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் இப்போது பேசியிருக்கிறார். அவர் கூறியதாவது:

’ஊ சொல்றியா மாமா’ சமந்தா
’ஊ சொல்றியா மாமா’ சமந்தா

“ஒருவர், ஏன் அய்ட்டம் பாடலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்? என்று கேட்டபோது சொன்னேன், ’அது உங்களுக்கு அய்ட்டம் சாங், என்னைப் பொறுத்தவரை அது பாடல் மட்டுமே’ என்று. அதையேதான் இப்போதும் சொல்கிறேன். ஒரு படத்தின் கதைக்கு என்ன தேவை, இயக்குநர் என்ன எதிர்பார்க்கிறார் என்பதை இசை அமைப்பாளர் பூர்த்தி செய்ய வேண்டும். இயக்குநர்களின் தேவைகளை நிறைவேற்றும் கடமை எங்களுக்கு இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை அது ஒரு பாடல். அதற்கு என்னால் என்ன முடியுமோ, அதை செய்ய வேண்டும். காதல் பாடலாக இருந்தாலும் சரி, பக்திப் பாடலாக இருந்தாலும் சரி, இசை அமைக்கும் முறை ஒன்றுதான். ஆனால், ’ஊ சொல்றியா’ பாடலை தேவையில்லாமல் சர்ச்சையாக்கி விட்டார்கள்”. இவ்வாறு தேவி ஸ்ரீ பிரசாத் கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in