சல்மான் கானுக்கு சங்கீதம்: இந்தியில் கலக்கப்போகும் டிஎஸ்பி!

சல்மான் கானுக்கு சங்கீதம்:
இந்தியில் கலக்கப்போகும் டிஎஸ்பி!

தெறிக்கவைக்கும் இசையை வழங்கி தென்னிந்திய சினிமாவில் புகழ்பெற்றிருக்கும் தேவி ஸ்ரீ பிரசாத், இப்போது நேரடி இந்திப் படத்துக்கு இசையமைக்கவிருக்கிறார். அதிலும் முதல் படமே சல்மான் கான் படமாக அமைந்திருப்பது அவரது ரசிகர்களை ஆனந்தத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

தமிழில் ‘சச்சின்’, ‘வில்லு’, ‘கந்தசாமி’, ‘சிங்கம்’, ‘வீரம்’ உட்பட பல படங்களுக்கு இசை அமைத்திருக்கும் தேவி ஸ்ரீ பிரசாத், தெலுங்கில் மிகப் புகழ்பெற்றவர். டிஎஸ்பி என இவரது பெயரைச் சுருக்கி அழைத்து கொண்டாடிவருகிறார்கள் இவரது ரசிகர்கள்.

சமீபத்தில் இவர் இசையில் வெளியான ’புஷ்பா’ பட பாடல்கள் சூப்பர் ஹிட்டாகி உள்ளன. இந்தியில் இவர் இசையமைத்த, ’டிங்க சிக்கா’ என்ற பாடல் சல்மான் கானின் ’ரெடி’ படத்தில் இடம்பெற்று ஹிட்டானது. சல்மான் கான் நடித்த ‘ராதே’ படத்தில் டிஎஸ்பி-யின் ’சீட்டி மார்’ என்ற பாடலும் இடம்பெற்றது. இப்பாடல்கள் தெலுங்குப் படங்களுக்காக தேவி ஸ்ரீ பிரசாத் உருவாக்கி இந்திக்குப் போனவை.

தேவி ஸ்ரீ பிரசாத், சல்மான் கான்
தேவி ஸ்ரீ பிரசாத், சல்மான் கான்

இந்நிலையில், அவர் நேரடி இந்திப் படத்துக்கு இசை அமைக்க இருப்பதாக செய்திகள் வெளியாயின. இதை அவரும் உறுதிப்படுத்தி இருந்தார். அதுபற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிவித்திருந்தார். அவர் வருண் தாவன் நடிக்கும் படத்துக்கு இசை அமைக்க இருப்பதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில், சல்மான் கான் நடிக்கும் ’கபி ஈத் கபி திவாளி’ என்ற படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்க இருக்கிறார். சல்மான் கான் தயாரிக்கும் இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, தெலுங்கு ஹீரோ வெங்கடேஷ் ஆகியோரும் நடிக்க இருக்கின்றனர். மணிகண்டன் ஒளிப்பதிவு செய்கிறார். அனலரசு சண்டைக் காட்சிகளை அமைக்க இருக்கிறார். பர்ஹத் சாம்ஜி இயக்க இருக்கிறார்.

Related Stories

No stories found.