ஜான்வி கபூர் படத்துக்கு இசை அமைக்கும் தேவிஸ்ரீ பிரசாத்!

ஜான்வி கபூர் படத்துக்கு இசை அமைக்கும் தேவிஸ்ரீ பிரசாத்!

சல்மான் கான் படம் மூலம் இந்தியில் அறிமுகமாகும் இசை அமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத், மேலும் ஒரு இந்திப் படத்துக்கு இசை அமைக்கிறார்.

தமிழில் ‘சச்சின்’, ‘வில்லு’, ‘கந்தசாமி’, ‘சிங்கம்’, ‘வீரம்’ உட்பட பல படங்களுக்கு இசை அமைத்திருக்கும் தேவி ஸ்ரீ பிரசாத், தெலுங்கிலும் பிசியாக இருக்கிறார். இப்போது, லிங்குசாமி இயக்கும் ’தி வாரியர்’ படத்துக்கு இசை அமைத்து வருகிறார். இந்தப் படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளன.

சமீபத்தில் இவர் இசையில் வெளியான ’புஷ்பா’ பட பாடல்கள் இந்தியிலும் சூப்பர் ஹிட்டாகின. இதையடுத்து சல்மான் கான் நடிக்கும் ’கபி ஈத் கபி தீவாளி’ படத்துக்கு அவர் இசை அமைக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

இப்போது மேலும் ஒரு இந்திப் படத்துக்கு அவர் இசை அமைக்கிறார். ஜான்வி கபூர், வருண் தாவன் நடிக்கும் இந்தப் படத்துக்கு 'பவால்' (Bawaal) என்று டைட்டில் வைத்துள்ளனர். இந்தப் படத்தை நிதேஷ் திவாரி இயக்குகிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in