‘புஷ்பா 2’ படத்துக்காக 3 பாடல்கள் ரெடி

‘புஷ்பா 2’ படத்துக்காக 3 பாடல்கள் ரெடி

’புஷ்பா 2’ படத்துக்காக, மூன்று பாடல்களை இசை அமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் உருவாக்கி இருக்கிறார்.

அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற படம், ’புஷ்பா’. சுகுமார் இயக்கிய இந்தப் படத்தில், ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்திருந்தார். மலையாள நடிகர் பஹத் ஃபாசில், கன்னட நடிகர் தனஞ்செயா, சுனில், அஜய் கோஷ், ராவ் ரமேஷ் உட்பட பலர் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்திருந்தார். நடிகை சமந்தா ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார்.

இயக்குநர் சுகுமார், அல்லு அர்ஜுன், தேவிஸ்ரீ பிரசாத்
இயக்குநர் சுகுமார், அல்லு அர்ஜுன், தேவிஸ்ரீ பிரசாத்

தெலுங்கு தவிர, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் இந்தப் படம் வரவேற்பைப் பெற்றுள்ளது. முதலில் இந்தப் படத்தை இரண்டு பாகமாக எடுக்கும் திட்டம் படக் குழுவிடம் இல்லை. இடையில்தான் அவர்களுக்கு அப்படி ஒரு எண்ணம் உருவானதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்தப் படத்தின் அடுத்த பாகத்துக்கான வேலைகளைத் தொடங்கிவிட்டார் சுகுமார். வட இந்தியாவிலும் இதன் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. புஷ்பா இந்தியிலும் வரவேற்பை பெற்றிருப்பதால், இந்தி ஹீரோ ஒருவரை முக்கிய வேடத்தில் நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்தப் படத்தின் பாடல்கள் ஏற்கெனவே அனைத்து மொழிகளிலும் வரவேற்பைப் பெற்றிருப்பதால் அடுத்தப் பாகத்திலும் பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க உள்ளனர். இந்நிலையில் புஷ்பா 2 ஆம் பாகத்துக்காக, மூன்று பாடல்களை, இசை அமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் ஏற்கெனவே உருவாக்கி விட்டார் என்றும் முதல் பாகத்தைவிட இந்தப் பாடல்கள் அதிக ஹிட்டாகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in