
தன்னை பாலியல் தொழிலுக்கு அழைத்து மிரட்டல் விடுப்பதாகவும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் துணை நடிகை பகீர் புகார் அளித்துள்ளார்.
சென்னை மயிலாப்பூரில் வசித்து வரும் 20 வயதுடைய துணை நடிகை ஒருவர் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் நேற்று பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், தனது தோழி மூலம் அறிமுகமான சினேகா, பிரகாஷ், ரியா, நந்தினி ஆகியோர் தன்னை பாலியல் தொழிலுக்கு அழைத்து மிரட்டல் விடுகின்றனர்" என்று கூறியுள்ளார்.
மேலும், தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், மிரட்டல் விடுத்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
நடிகர் பாக்யராஜ் இயக்கிய உலக சாதனை 369, அகத்தியன் என்ற குறும்படம் உள்பட சில விளம்பர படங்களில் இந்த துணை நடிகை நடித்துள்ளார் என்பது நினைவில் கொள்ளத்தக்கது.