நடிகை ஜூஹி சாவ்லாவுக்கு விதிக்கப்பட்ட அபராதம் குறைப்பு

நடிகை ஜூஹி சாவ்லா
நடிகை ஜூஹி சாவ்லா

நடிகை ஜூஹி சாவ்லாவுக்கு விதிக்கப்பட்ட ரூ.20 லட்சம் அபராதத் தொகை. ரூ. 2 லட்சமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இந்தி நடிகை ஜூஹி சாவ்லா, ‘5ஜி தொழில்நுட்பத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தக் கூடாது’ என்று கூறி, டெல்லி உயர் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜேஆர்.மிதா, அவர் மனுவை தள்ளுபடி செய்தார். அதோடு, வெற்று விளம்பரத்துக்காக இந்த வழக்குத் தொடரப்பட்டு உள்ளதாகக் கூறி, ஜூஹி சாவ்லாவுக்கு ரூ.20 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

இந்த அபராதத்தைத் தள்ளுபடி செய்யக்கோரி, டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடிகை ஜூஹி சாவ்லா மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மனுவை நீதிபதிகள், விபின் சங்கி, ஜஸ்மீத் சிங் அகியோர் விசாரித்தனர். நடிகை ஜூஹிக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாகக் குறைத்தனர். மேலும் தனி நீதிபதி தனது உத்தரவில் கூறியிருந்த, ‘வெற்று விளம்பத்துக்காக வழக்குத் தொடர்ந்துள்ளார்’ என்ற கருத்தையும் நீக்கினர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in