சிறந்த கலையின் தூதராக இருந்தவர் பிர்ஜு மகாராஜ்!

முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
பண்டிட் பிர்ஜு மகாராஜ்
பண்டிட் பிர்ஜு மகாராஜ்twitter

பிரபல கதக் நடனக் கலைஞர் பண்டிட் பிர்ஜு மகாராஜ் மறைவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பத்ம விபூஷன் விருது பெற்ற பிரபல கதக் நடனக் கலைஞரான பிர்ஜு மகாராஜ் மாரடைப்பால் இன்று காலமானார். அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 'பழம்பெரும் கதக் நடனக் கலைஞரான பண்டிட் பிர்ஜு மகாராஜின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது.

அவர் ஒரு சிறந்த கலையின் தூதராக இருந்தார். அவர் ஒரு வளமான பாரம்பரியத்தை விட்டுச் சென்றுள்ளார். அவரது மறைவு நாட்டுக்கும் கலைக்கும் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in