நிர்வாண புகைப்பட சர்ச்சையில் சிக்கிய ரன்வீரை விவாகரத்து செய்கிறார் தீபிகா படுகோன்?

நிர்வாண புகைப்பட சர்ச்சையில் சிக்கிய ரன்வீரை  விவாகரத்து செய்கிறார்  தீபிகா படுகோன்?

நடிகர் ரன்வீர் சிங்கை நடிகை தீபிகா படுகோன் விவாகரத்து செய்ய உள்ளதாக இணையதளங்களில் செய்தி பரவி வருகிறது.

பாலிவுட் உலகின் பிரபல நடிகையாக திகழ்பவர் தீபிகா படுகோன். இவர் தமிழில் ரஜினிகாந்த் ஜோடியாக 'கோச்சடையான்' அனிமேஷன் படத்தில் நடித்துள்ளார். இவரும் இந்தி நடிகர் ரன்வீர் சிங்கும் 6 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்த நிலையில், கடந்த 2018-ல் இத்தாலியில் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு தீபிகா படுகோனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மன அழுத்தம் கரணமாக அவர் மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தீபிகாவிற்கும, அவரது கணவர் ரன்வீர் சிங்கிற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டதாகவும், அத்துடன் கணவரை தீபிகா விவாகரத்து செய்ய இருப்பதாகவும் இணைய தளத்தில் தகவல் வெளியாகி பரவி வருகிறது. கடந்த சில மாதங்களாகவே இருவரும் இணக்கமாக இல்லை என்றும், அவர்களிடையே இடைவெளி அதிகமாகி உள்ளது என்றும், இவ்விஷயம் விவாகரத்துவரை செல்லும் வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது.

மேலும் தீபிகா படுகோன் வருமானம் ரன்வீர் சிங்கை விட அதிகம் என்கின்றனர். சமீபத்தில் ரன்வீர் சிங் நிர்வாண புகைப்படம் சர்ச்சையானபோது தீபிகா படுகோனையும் பலர் விமர்சித்தனர். இதுவும் கணவன், மனைவிக்குள் ஏறபட்ட தகராறுக்கு காரணமாக இருக்கலாம் என்ற கூறப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in